சசிகலாவுக்கு கிடைக்கும் பரோலை தடுப்பது மனிதாபிமானமற்றச் செயல்.. தா.பாண்டியன் காட்டம்
சசிகலாவுக்கு கிடைக்கும் பரோலை தடுப்பது மனிதாபிமானமற்றச் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவுக்கு கிடைக்கும் பரோலுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது மனிதாபிமானமற்றச் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையாக விமர்சித்தார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்பு தான மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கணவரை அருகில் இருந்து பார்த்து கொள்வதற்காக சசிகலா கர்நாடக சிறைத் துறை டிஜிபியிடம் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அவரது பரோல் மனுவை அதிகாரிகள் ஆராய்ந்த போது அந்த மனுவில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து மீண்டும் அனுப்பமாறு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால் அவருக்கு பரோல் கிடைக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தடங்கல்களை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று நடராஜனுக்கு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப்பட்டது. அப்போது நடராஜனை சந்திக்க தா.பாண்டியன் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் கூறுகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு விழிப்போடு சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும்.
போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனையில் இல்லை என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். நோய்வாய்பட்டிருக்கும் கணவரை காண ஒரு பெண்ணுக்கு பரோல் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுவது மனிதாபிமானமற்ற செயல் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications