“நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?”... முதல் பரிசு ரூ. 5001.. பந்தயத்துக்கு நீங்க ரெடியா?
நெல்லை: கல்லிடைக் குறிச்சியில் பரோட்டோ பிரியர்களுக்கான வித்தியாசமானப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என நடனப் போட்டி ஒன்று நடைபெற்றது. தற்போது அதைப் போலவே, நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கல்லிடைக்குறிச்சியில் இயங்கி வரும் அசைவ ஹோட்டல் ஒன்று வித்தியாசமான சாப்பாட்டுப் போட்டியை அறிவித்துள்ளது.

அந்தப் போட்டிக்கு, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரி, பரோட்டா போட்டி ஒன்றில் கலந்து கொண்டு நம்மை எல்லாம் நாக்கு ஊற வைப்பார். கடைசியில் பர்ஸ்ட் இருந்து போட்டியை ஆரம்பிக்கலாம் என இன்ப அதிர்ச்சியும் கொடுப்பார். இந்தக் காட்சி மூலம் பிரபலமானதாலேயே அவர் பேரோடு பரோட்டா ஒட்டிக் கொண்டது.
எனவே, இந்த பரோட்டோ சாப்பிடும் போட்டிக்கு, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். போட்டியின் விதிமுறை என்னவென்றால் போட்டியாளர் சாப்பிடும் பரோட்டாவிற்கு காசு கொடுத்து விட வேண்டும்.
ஆனால், இரவு 9 மணிக்குள் அதிக பரோட்டா சாப்பிடும் நபர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ. 5001 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பரோட்டா பிரியர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம்... வேறென்ன 'ஆல் தி பெஸ்ட்' தான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications