நாளை முழு அடைப்புப் போராட்டம்... விழுப்புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - வீடியோ
நாளை நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்: தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
தமிழகத்தில் மழை பொய்த்த காரணத்தால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி நாசமாகியது. இதைக் கண்டு வேதனையடைந்த 220க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளூம் துயரம் கடந்த ஆண்டிலிருந்துதான் அதிக அளவில் நடைபெர்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 41 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். அவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.
அதன்பிறகு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழுஅடைப்புப் போராட்டம் நாளை நடத்தப்படும் என அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுத்தது. இந்நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில், விழுப்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. பாமக, தமாக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ












Click it and Unblock the Notifications