பாலம் கட்டாவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்.. அரசுக்கு நல்லகண்ணு எச்சரிக்கை !
நெல்லை மாவட்டம் பணகுடியில் பாலம் அமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் நான்குவழிச் சாலையில் முடங்கியுள்ள பாலப்பணியை மீண்டும் தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நடக்கின்றன.

இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட விபத்துகளும், 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு முடித்து வைத்தார். அப்போது பேசிய அவர், 'விரைவில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்' என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications