நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி.. பயணியின் கை-கால் பறிபோனது!
நெல்லை: செங்கோட்டையில் ரயிலுக்கு அடியில் சிக்கிய பயணியின் ஒரு காலும், ஒரு கையும் துண்டானது. ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது இந்த விபரீதம் நடந்தது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சொரிமுத்து. இவர் நெல்லையில் இருந்து புறப்படும் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஏறி செங்கோட்டைக்கு வந்தார். செங்கோட்டை ரயில் நிலையத்துக்குள் 2வது நடைமேடைக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. ஆனால் ரயில் நிற்பதற்குள்ளேயே சொரிமுத்து ரெயிலில் இருந்து வேகமாக இறங்க முற்பட்டுள்ளார்.

அப்போது, கால் தவறி தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரயிலை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். உடனே ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரயில் நிறுத்தப்பட்டதும் பொதுமக்களும், போலீசாரும் சேர்ந்து விபத்தில் சிக்கிய சொரிமுத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் அவருக்கு ஒரு காலும், ஒரு கையும் துண்டாகி இருப்பது தெரியவந்தது. படுகாயங்களுடன் கிடந்த சொரிமுத்தை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications