நர்சிங் மாணவிகள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு
நெல்லை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை நர்சிங் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த நர்சிங் மாணவிகளுக்கு மட்டுமே சீனியரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தனியார் பயிற்சி பள்ளியில் பட்டிய படிப்பு படித்தவர்களுக்கும, தொலை தூர கல்வி மூலம் படித்தவர்களுக்கும் செவிலியர் பணி வழங்க கூடாது.
இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தனியார் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்க கூடாது. ஓப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர்களை பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு விடுமுறை நாட்களில் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும்.
விடுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்வதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலர் சிரமத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில் நெல்லை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அரசு நர்சிங் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் சீனியரிட்டி அடிப்படையில் பணி வழங்க கூடாது. ஓரே பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட்டாலும் எங்களுக்கு வேலை கிடைப்பது அரிது. எல்லாவிதத்திலும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளே இதுவரை பயன் அடைந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்வாணையம் மூலம் தனியார் நர்சிங் மாணவிகளுக்கும் தேர்வு நடத்தி வேலை வழங்க கோர்ட் உத்தரவிட்டது. அந்த அரசாணையை விரைந்து செயல்படுத்திட வேண்டும். தனியார் நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட முன் வந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications