வலிப்பு வந்து துடித்த குழந்தை.. அலட்சியம் காட்டிய மயிலாடுதுறை அரசு மருத்துவமனை! உறவினர்கள் மறியல்
மயிலாடுதுறை: வலிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் ரத்தினகுமார்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களுடைய 9 மாத குழந்தைக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. குழந்தையின் நிலையை பார்த்து பதறிய பெற்றோர், உடனடியாக மயிலாடுதுறை பெரியார் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தை தூக்கிச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. பணியில் இருந்த செவிலியர், மருத்துவர் வர தாமதமாகும் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் குழந்தையை பரிசோதித்து பார்த்த அவர், குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லி, தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுக்க சொல்லியுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் கூட மருத்துவர் யாரும் வராததால் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், "குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது என அவசரமாக மருத்துவமனைக்கு வந்தோம். ஆனால், மருத்துவமனையில் யாரும் இல்லை. முதல் தளத்தில் குழந்தைகள் வார்டு இருந்தது. அங்கே சென்று பார்த்தாலும் மருத்துவரை காணவில்லை. பின்னர் ஒரு நர்ஸ் வந்தது, குழந்தையை கிள்ளி பார்த்தார். குழந்தை அழுதது. எனவே குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்துக்கொள்ளுமாறு கூறினார்.
அவசரத்திற்காகதான் மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால் மருத்துவர்களே இல்லை என்பது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாதது பெரும் பிரச்னையாக இருக்கிறது. மகப்பேறு பிரிவில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆகையால் உடனடியாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தியும் கடந்த ஆண்டு அனைத்து துறை மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications