எதே.. உத்தரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு நிதி வருதா? இஷ்டத்துக்கு உருட்டிய பவன் கல்யாண்!
அமராவதி: தமிழ் படங்களை இந்தியில் டப் செய்வதன் மூலம் உத்தரப் பிரதேசத்திலிருந்து பணம் கொட்டுகிறது என உருட்டியிருக்கிறார் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண்.
தமிழ் படங்கள் இந்திக்கும், இந்தி படங்கள் தமிழுக்கும் எவ்வளவு டப்பிங் செய்யப்படுகிறது? தமிழக திரைத்துறை இந்தி மார்க்கெட்டை நம்பிதான் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு இந்த செய்தி விளக்கமளிக்கிறது.

பவன் கல்யாண் பேசியது இதுதான்
ஜனசேனா கட்சியின் 12வது ஆண்டு விழா ஆந்திர மாநிலம் பிதாபுரத்தில் நேற்று நடந்தது. இதில் பேசிய பவன் கல்யாண் "சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறீர்கள். இந்தியை எதிர்க்கிறீர்கள். எல்லாம் தேசிய மொழிகள்தானே! தமிழ்நாட்டில் இந்தி வரக்கூடாது என்று முழக்கங்கள் ஒலிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்தி வேண்டாம் என்றால் தமிழ் சினிமாவை இந்தியில் டப் செய்வது ஏன்?
பணம் மட்டும் இந்தியிலிருந்து வர வேண்டும்.. உத்தரப் பிரதேசத்திலிருந்தும், பீகாரிலிருந்தும், சத்தீஸ்கரிலிருந்து பணம் வேண்டும். ஆனால் இந்தி மட்டும் வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? அதில் என்ன நியாயம் இருக்கிறது? வேலை செய்வதற்கு ஆட்கள் பீகாரிலிருந்து வர வேண்டும் ஆனால் இந்தி வேண்டாம் என்றால் எப்படி?" என்று அவர் பேசியிருந்தார்.
உண்மை என்ன?
சரி இதனை ஒவ்வொரு பாயிண்ட்டாக டீகோட் (DCODE) செய்வோம். முதல் விஷயம் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்வதன் மூலம் பணம் கொட்டுகிறது என்கிற கருத்து சரியா என்பதை பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரையுலகில் ஏராளமான சினிமாக்கள் வெளியாகின்றன. தோராயமாக ஆண்டுக்கு 100 படங்கள் வெளியாகிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் எத்தனை படங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்படுகின்றன? அனேகமாக 10-20 திரைப்படங்கள் இருக்கலாம் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மண்டையிலிருக்கும் கொண்டையை மறந்துவிட்டு..
இதே பாலிவுட் துறையை எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு 100+ படங்கள் வெளியாகின்றன. இதில் 20-30 திரைப்படங்கள் வரை தமிழில் டப் செய்யப்படுகிறது. ஆக ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பணம்தான் பாலிவுட் திரைக்கு அவசியமாகிறது. சிம்பிளாக சொல்வதெனில், திரைத்துறையிலும் இந்தி ஆதிக்கம்தான் அதிகம்.
மட்டுமல்லாது இந்தி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழியில் படத்தை கொடுத்தால்தான் பார்ப்பார்கள். அதெல்லாம் கிடையாது நாங்கள் தமிழை தவிர வேறு மொழிக்கு படத்தை டப் செய்ய மாட்டோம் என்று சொன்னால் அதுதான் மொழி ஆதிக்கம். ஆகவே பவன், தன் மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறந்துவிட்டு பேசக்கூடாது என நெட்டிசன்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
கொட்டி கொடுக்கும் தமிழ்நாடு
இரண்டாவது விஷயத்துக்கு வருவோம். திரைப்படங்களை டப் செய்வதன் மூலம் உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பணம் தமிழக்திற்கு கொட்டுகிறது என்று பவன் பேசியிருக்கிறார். மிஸ்டர் பவன்.. தமிழக மக்கள் உழைத்து கொட்டும் பணத்தில்தான் மத்திய அரசு உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதியை பகிர்ந்து அளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதில் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டது வெறும் ரூ.7,057 கோடி மட்டுமே. ஆனால் உத்தர பிரதேசத்துக்கு ரூ.31,039 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது தெரிகிறதா எங்கிருந்து எங்கு பணம் கொட்டுகிறது என்று!
அமெரிக்காவில் பேச முடியுமா?
மூன்றாவது விஷயம் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்கா போகும் இந்தியர்கள், அங்கு இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டியதுதானே! இத்தனைக்கும் உங்கள் ஊர் பெண்ணை கட்டிய ஆந்திராவின் மருமகன் ஜே.டி.வான்ஸ் தான் துணை அதிபராக இருக்கிறார். ஆனால் நீங்கள் இந்த கோரிக்கையை எழுப்ப மாட்டீர்கள். ஏன் என்றால் அது நியாயம் கிடையாது என்று உங்களுக்கே தெரியும். மீறி எழுப்பினால் என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படி இருக்கும்போது தமிழகத்திற்கு பிழைப்புக்காக வரும் தொழிலாளர்களின் மொழியை ஏன் கற்க வேண்டும்? அதற்கு மாறாக தமிழக அரசு புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வியை சொல்லிக்கொடுக்கிறது. இதுதான் காலத்தின் கட்டாயம் பவன் என்று நெட்டிசன்கள் வறுத்துள்ளனர்.
பவனின் பேச்சு பற்றி உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள் வாசகர்களே!
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!











Click it and Unblock the Notifications