வள்ளுவர் விழாவில் ‘நயன்தாரா’வின் புகழ் பாடிய பழ.கருப்பையா!
விருதுநகர்: தற்போது நயன்தாராவுக்கு ரசிகர்கள் அதிமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னர் ஒரு நடிகை இருந்த இடத்தை அவர் பிடித்துள்ளார் என பொருள். ஆனால், இது புகழ் அல்ல. எக்காலத்திலும் வள்ளுவர் புகழை மற்றொருவர் பிடிக்க முடியாது என துறைமுகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் திருவள்ளுவர் மன்றத்தின் 51-வது ஆண்டு விழா மன்ற கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நிகழ்ச்சியில் துறைமுகம் தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பழ. கருப்பையா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

தமிழின் சிறப்பு...
இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்கள் வந்த வேலையை விட்டு விட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு தமிழ் சிறப்பு பெற்றது.

பழைய வழக்கம்...
இந்தியர்களை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தனியாக இருப்பார்கள். எனவே அவர்களுக்கு இந்தியர்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் குறித்த புத்தகம் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதே நிலை தற்போதும் நீடிக்கிறது.

அதே நடைமுறை...
ஆளுநர் வருவதற்கு முன்னாலே அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்ற சட்டம் புத்தகத்தில் உள்ளது. ஆளுநர் வந்த பின்னர் தமிழ்தாய் வாழ்த்து அவருக்கு தெரியாது என்பதால் அவரது இருக்கையில் அமர்ந்து விடுவார். பின்னர் அவரது உதவியாளர் முறைகளை கூறிய பின்னர் எழுந்து நிற்பார். இப்படி ஆங்கிலேயன் இந்தியர்களை பயமுறுத்துவதற்கான நடைமுறைகள் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

ஊழல் அரசியல்வாதிகள்...
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது நாணத்தால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். ஆனால் லஞ்ச வழக்கில் சிறை செல்லும் அரசியல்வாதிகள் மக்களை பார்த்து கை அசைத்துக் கொண்டே செல்கின்றனர்.

நயன்தாரா புகழ்...
தற்போது நயன்தாராவுக்கு ரசிகர்கள் அதிமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னர் ஒரு நடிகை இருந்த இடத்தை பிடித்துள்ளார். ஒருவரது புகழ் என்பது அவர் இடத்திற்கு மற்றொருவர் வரும் போது புகழ் புகழால் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இது புகழ் அல்ல. எக்காலத்திலும் வள்ளுவர் புகழை மற்றொருவர் பிடிக்க முடியாது'' என்றும் தெரிவித்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications