புரட்சி பாரதம் செயற்குழுவில் அதிமுக வேட்பாளர் அறிமுகம்
சென்னை: அதிமுக சார்பில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், புரட்சி பாரதம் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டார்.
அவரது வெற்றிக்கு தீவிரமாக உழைக்கவும் புரட்சி பாரதம் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பூவை எம் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
16 வது நாடாளுமன்ற தேர்தல் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் அவசர செயற்குழு கூட்டமும் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுகமும் பூவிருந்தவல்லி சுந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்..

அதிமுக வேட்பாளர் வேணுகோபால், அமைச்சர் ரமணா, ஜேசிடி.பிரபாகர் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர், பூவிருந்தவல்லி நகராட்சித் தலைவர் திருநாவுக்கரசு , எம்.எல்.ஏ. மணிமாறன் மற்றும் புரட்சி பாரதம் மாநில, மாவட்ட , ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 40 தொகுதியிலும் வெற்றி பெற புரட்சி பாரதம் தீவிரமாக தேர்தல் பணியாற்றி, முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க பாடுபடுவோம் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை எம். ஜெகன்மூர்த்தி பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications