அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடிக்கிறார்கள், ஜெயலலிதாவும் பயப்படுகிறார்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் அதிமுக வேட்பாளர்களை விரட்டியடிப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்திக்க அஞ்சுவதாகவும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே மக்கள் மத்தியில் பேசிய அவர் கூறுகையில்,

ஜெயலலிதா

ஜெயலலிதா

தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போகிறவர்கள் நாங்கள் அல்ல. எந்த சூழலிலும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள். முதல்வர் ஜெயலலிதாவோ அரசு விழாக்களை கூட வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தான் துவங்கி வைக்கிறார். அவர் நடத்துவது காட்சி ஆட்சி அன்று.

விரட்டியடிப்பு

விரட்டியடிப்பு

அதிமுக ஆட்சிக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படாததால் அக்கட்சி வேட்பாளர்களால் தொகுதி பக்கமே போக முடியவில்லை. அவர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர். ஜெயலலிதாவும் மக்களை சந்திக்க அஞ்சுகிறார். அதனால் தான் ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்கிறார்.

வாக்குறுதி

வாக்குறுதி

சட்டசபை தேர்தல் நேரத்தில் தான் அளித்த எந்த வாக்குறுதியையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்றார். ஆனால் அவர் தமிழகத்தை மின்சாரம் இல்லா மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

சட்டசபை

சட்டசபை

திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு அதில் 6 மாதம் சட்டசபையும் நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போதே ஏன் அவர்கள் அந்த கட்டிடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?. அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் புதிய தலைமை செயலக கட்டிடத்தை ஏன் கிடப்பில் போட்டுள்ளனர்?

கொடநாடு

கொடநாடு

இன்று கோட்டை என்றால் அது கொடநாடாக உள்ளது. கோப்புகளில் கையெழுத்து வாங்க அரசு அதிகாரிகள் கொடநாடு செல்ல வேண்டி இருக்கிறது. இது தான் நல்லாட்சியா? வரும் தேர்தலில் அவருக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

சென்னை

சென்னை

திமுக ஆட்சியில் பூங்காக்கள் அமைத்தோம், மேம்பாலங்கள் மற்றும் சிறு சிறு பாலங்களை கட்டினோம். ஆனால் தற்போது சென்னை நகரம் எப்படி இருக்கிறது என்பது நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+