சிங்கம் 3 பட பாணியில் தூத்துக்குடியில் கொட்டப்பட்ட வெளிநாட்டு கழிவுகள்.. மக்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி அருகே சிங்கம் 3 பட பாணியில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே சிங்கம் 3 பட பாணியில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே காட்டுப் பகுதியில் கொட்டப்பட்ட வெளிநாட்டு கழிவுகளால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெளிநாட்டில் இருந்து மின்னணு மற்றும் மருத்துவ கழிவுகள் 10 கன்டெய்னர்களில் கொண்டுவரப்பட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே கொட்டப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கழிவுகள்
ஸ்ரீவைகுண்டம் அருகே காட்டுப் பகுதியில் இந்த வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

சிங்கம் 3 படத்தை போல்
இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கம் 3 படத்தில் வெளிநாட்டில் இருந்து மருத்துவ மற்றும் மின்னணு கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மருத்துவ கழிவுகள்
இந்த வெளிநாட்டு மருத்துவ கழிவுகள் எரிக்கப்படும் போது அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுவாயுவால் அப்பாவி குழந்தைகள் இறப்பது போன்றும் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஏஜென்டுகள் உள்ளனரா?
இந்நிலையில் அந்தப் படத்தை போலவே வெளிநாட்டு கழிவுகள் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் கொட்டப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மூலம் தூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டனவா அல்லது தமிழகத்திலேயே அதற்கு ஏஜென்டுகள் உள்ளனரா என சந்தேகம் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications