தமிழகத்தின் பெரும்பாலான வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.500 நோட்டுகள் விநியோகம்!
தமிழகத்தின் பெரும்பாலான வங்கிகளில் இன்றுமுதல் 500 ரூபாய் நோட்டுக்கள் விநியோகிக்ககப்படும்.
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள 500 ரூபாய் நோட்டுகள், தமிழகத்தில் முதன்முதலாக சேலத்தில் உள்ள தனியார் வங்கிகளில் நேற்று விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் ஒரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், மாநிலத்தின் அனைத்து வங்கிகளுக்கும் ரூ00 ரூபாய் நோட்டுக்கள் வந்திருப்பதாகவும் அவை இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்மூலம் பணத்தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை வழங்கும் வகையில் பெரும்பாலான ஏடிஎம்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம் மூலமும் பெற முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications