அலுவலகத்தில் இளம் பெண்ணுடன் ஆர்.ஐ. உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்த மக்கள் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: வருவாய்துறை அலுவலகத்தில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆய்வாளர் பொது மக்களிடம் கையும் களவுமாக சிக்கினார்.

கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ராஜ்குமார். இவரது அலுவலகம் பம்பப்படையூரில் உள்ளது. இவருக்கு உதவியாக ஒரு பெண்ணை அந்த அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளார்.

People caught a RI and a woman

கடந்த சில நாட்களாக பிற்பகல் நேரத்தில் அலுவலக கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டு இருவரும் உள்ளே இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ராஜ்குமார் வழக்கம் போல அலுவலகத்தில் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு அந்த பெண்ணுடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலுவலகத்திற்கு வெளிப்புறமாக பூட்டு போட்டுள்ளனர்.

பின்னர் வருவாய்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். கும்பகோணம் தாசில்தார் கார்த்திகேயன், பட்டீஸ்வரம் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் வந்து அலுவலக பூட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பெண்ணும், ஆர்.ஐயும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

அறையில் தனியாக இருந்த வருவாய் ஆய்வாளரையும், அந்த பெண்ணையும் மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை ராஜ்குமார் மீது எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People caught a RI and a woman while they were in a compromising position inside a office in kumbagonam near.
Please Wait while comments are loading...