பேசாம ஆட்சியை கலைச்சிடுங்க ஜி.. ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் குவிகிறது மனுக்கள்
இந்த ஆட்சியை கலைத்துவிடுமாறு குடியரசு தலைவருக்கும், பொதுத் தேர்தலை நடத்துமாறு, தேர்தல் கமிஷனுக்கும் மக்கள் இ.மெயில்களை அனுப்ப தொடங்கியுள்ளனர்.
சென்னை: தமிழக அரசை கலைக்குமாறு ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் சமூக வலைத்தளங்கள், இ-மெயில்கள் மூலமாக கோரிக்கைகள் பெருகி வருகிறது.
தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டு, கடும் அமளிக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பழனிசாமி வெற்றி பெற்றார்.
அப்போது திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் மைக்கை உடைத்தனர், அவை பாதுகாவலர்கள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை வெளியே குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளே இல்லாத அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

மக்களுக்கும் விருப்பமில்லை
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விதிமுறைப்படி நடைபெறவில்லை என்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சசிகலா தரப்பை சேர்ந்தவர் முதல்வராகியுள்ளதை பொதுமக்களில் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை சமூக வலைத்தள பதிவுகள் காட்டி வருகின்றன.
|
சமூக வலைத்தளங்கள்
இந்நிலையில், இந்த ஆட்சியை கலைத்துவிடுமாறு குடியரசு தலைவருக்கும், பொதுத் தேர்தலை நடத்துமாறு, தேர்தல் கமிஷனுக்கும் மக்கள் இ.மெயில்களை அனுப்ப தொடங்கியுள்ளனர். ஆட்சியை கலைத்துவிடுங்கள் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

இ-மெயில் புகார்கள்
'உங்கள் மன உளைச்சலை, ஆளுநருக்கு கடிதமாக எழுதுங்கள்' என, கமல் கூறியுள்ளார்.சட்டசபை ஓட்டெடுப்புக்கு பின், டிவிட்டர் வலைதளத்தில் கமல், 'ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு, மன உளைச்சலை தெரியப்படுத்துங்கள். அதில், மரியாதையாக பேச வேண்டும். அது, சட்டசபை அல்ல, ஆளுநர் வீடு' என, கூறியிருந்தார். [email protected] என்ற மெயில் ஐடியை கமல் குறிப்பிட்டிருந்தார். எனவே நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை இப்படி பல வகைகளில் தெரியப்படுத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications