ஆர்.கே.நகரில் கமல்ஹாசனுக்கு எதிராக சாலை மறியலில் குதித்த பொதுமக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமலுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்- வீடியோ

  சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் 'பொதுமக்கள்' போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளரிடம் பணம் பெற்று வாக்களித்தது என்பது, திருடனிடமிருந்து பிச்சை எடுப்பதற்கு சமம் என கமல்ஹாசன் கருத்து வெளிப்படுத்தியிருந்தார்.

  இதனால் தினகரன் தரப்பு கடும் கோபத்தில் உள்ளது.

  தினகரனுக்கு டேமேஜ்

  தினகரனுக்கு டேமேஜ்

  பாஜகவுக்கு எதிராக இருப்பதாக தினகரன் சமீபகாலங்களாக பேட்டியளித்து வருவதால் ஓரளவுக்கு திராவிட இயக்க கொள்கையாளர்களிடம் தினகரன் செல்வாக்கு பெறத்தொடங்கினார். இந்த நேரத்தில், அவரது இமேஜை டேமேஜ் செய்யும்விதமாக கமல் கருத்து அமைந்தது.

  போலீசில் புகார்

  போலீசில் புகார்

  இதனால் தினகரன் தரப்பு கடும் கோபம் அடைந்துள்ளது. ஆர்.கே.நகர் மக்கள் என கூறி, கமலுக்கு எதிராக காவல் நிலையத்தில் சிலர் புகார் பதிவு செய்துள்ளனர்.

  சாலை மறியல்

  சாலை மறியல்

  இந்த நிலையில், பொதுமக்கள் என கூறி சிலர் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டையில், திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் நடந்தது. இதனால் பரபரப்பு நிலவியது.

  நெருக்கடி அதிகரிப்பு

  நெருக்கடி அதிகரிப்பு

  கமலுக்கு எதிராக நெருக்கடிகளை அதிகரித்து, அவருக்கு எதிராக மக்கள் கருத்தை தூண்டுவதில் தினகரன் முகாமினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  People enter protest in RK Nagar area against actor Kamal Haasan's comment on them. Kamal Hassan has said that RK Nagar people had received money from candidate.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற