லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ள மெரீனா புரட்சி- காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆய்வு
ஜல்லிக்கட்டுக்காக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கான மக்கள் மெரீனா கடற்கரையில் திரண்டு நடத்தி வரும் புரட்சியை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்தி வரும் காளை புரட்சிப் போராட்டம் 4வது நாளை கடந்துள்ளது.
காலையில் கொளுத்தும் வெயில் நள்ளிரவு நேரத்தில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல்,இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும்,குழந்தைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆவேச முழக்கம், பறையாட்டம், சிலம்பாட்டம் என அவ்வப்போது சோர்வை விரட்ட களைகட்டுகிறது மெரீனா புரட்சி. பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள் என்று அனைத்து தரப்பினரும் அலை, அலையாக வந்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அரசியல் கலப்பு இல்லாமல் முதன் முதலாக தமிழர்கள், தங்கள் பிரச்சனைக்காக சொந்தமாக தாமாகவே போராட்டம் நடத்திய சாதனையை படைத்தனர். இந்த போராட்டம் உலகம் முழுவதும் பேசப்படும் தனித்துவம் கொண்ட ஒரு போராட்டமாக மாறி உள்ளது.
இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. முழுஅடைப்பு போராட்டமாக மாறி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது காளை புரட்சி.
இன்று மெரீனாவில் திரண்டவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நிறைய பெற்றோர் தங்களுடன் தங்களது மகன்கள், மகள்களையும் அழைத்து வந்திருந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நிறைய மாணவர்கள் இன்றைய போராட்டத்துக்கு வந்திருந்தனர்.
மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். திரும்பிய திசையெங்கும் மனித தலைகளாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டாலும் எந்த வித சிக்கலும் இன்றி கட்டுப்கோப்பாக அமைதியாக நடந்து வருகிறது காளை புரட்சி.
போராட்டதிற்கு ஆதரவாக பேசிய காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாட்டோம்.
— ♣мя gяєєи♣ (@MrMarmaYogi) January 20, 2017
- மயிலாப்பூர் துணை ஆனையர் pic.twitter.com/cQfzE7zo9v
இந்த கூட்டம் எங்கிருந்து, எப்படி வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறியபடி உள்ளனர். 3 லட்சம் மக்களையும் காவல்துறையினர் சுற்றி வந்து கொண்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவசர சட்டம் கொண்டுவருவோம் என்று சொல்லியும் புரட்சியாளர்கள் கேட்கவில்லை. கடல் அலையை விட மக்களின் குரல் ஆவேசமாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறது அரசு? வாடி வாசலை தாண்டி காளைகள் துள்ளி குதித்தால் மட்டுமே மக்களின் ஆவேசம் அடங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications