நெல்லை கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம்!
நெல்லை கடையநல்லூரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
நெல்லை: நெல்லை கடையநல்லூரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மேலகடையநல்லூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள். அந்த கடைக்கு அருகில் பள்ளி கூடம், கோவில்கள், வீடுகள், கடைகள் உள்ளது. இதனால் அங்கு செல்லும் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

டாஸ்மாக் கடை இருப்பதால் அங்கு அடிக்கடி பிரச்சனை நடந்து வருகிறது. மக்கள் இதற்கு எதிராக கடந்த சில நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடை இன்னும் மூடப்படவில்லை.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே தீ வைத்தனர். தீ வைத்ததில் மதுபாட்டில்கள் எரிந்தது.

மதுபாட்டில் என்பதால் வரிசையாக தீ வேகமாக பரவியது. தற்போது அந்த கடையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு படை வீரர்கள் அணைத்து வருகிறார்கள். தீ வைத்த நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.

-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications