9 வீட்டில் ஒத்த ரூபாய் பிச்சை.. புத்தாண்டு பிறந்த நேரம் சரியில்லையாம்.. பரிகாரம் செய்த பெண்கள்!
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை பகுதியில் புத்தாண்டு பிறந்த நேரம் சரியில்லை என யாரோ ஒரு சாமியார் கூறியதைக் கேட்டு, ஒன்பது வீடுகளில் பிச்சையெடுத்து பரிகாரம் செய்துள்ளனர் அப்பகுதி பெண்கள்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமி படையாச்சி தெருவுக்கு நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் வந்துள்ளார். வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்ற அந்த சாமியார், ‘இந்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நேரம் சரியில்லை. எனவே, தாய்க்கு ஒரே பையனாக பிறந்த ஆண்களுக்கும், அந்த குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படும். எனவே அந்த ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் பரிகாரம் செய்யவேண்டும்.

அவர்கள் 9 வீடுகளில் தலா 1 ரூபாய் பிச்சை எடுத்து அம்மன்கோவிலில் காணிக்கை செலுத்தி, தீபமேற்றி வழிபட வேண்டும். அப்படி நடந்தால்தான் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம்' எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், ஒரு ஆண் குழந்தையை மட்டும் பெற்றெடுத்த பெண்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த தகவல் சுற்றுப்புற பகுதிகளுக்கும் பரவியது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு ஆண் குழந்தையை மட்டும் பெற்றெடுத்த பெண்கள் சாமியார் கூறியபடி 9 வீடுகளில் தலா ஒரு ரூபாய் பிச்சை எடுத்து, அதை அருகில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இதனால், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் வழக்கத்தை விட அதிக பெண்கள் கூட்டம் காணப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications