மாணவியிடம் சில்மிஷம்­ செய்த தமிழாசிரியர்..­. நெல்லையில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் இருக்கும் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மாணவியிடம் சில்மிசம் செய்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிலமணி நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் இருக்கும் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் சில்மிசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மாலையில் இருந்து அங்கு பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

People protesting against a Tamil teacher in Thirunelveli government school

நேற்று இந்தப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ராஜு என்பவர் தன்னிடம் தமிழ் படிக்க மாணவிகளை இதே பகுதியிலுள்ள கோமதி நகரிலுள்ள வீட்டுக்கு வரச்சொல்லியுள்ளார்.அப்போது இந்தப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆசிரியர் வீட்டுக்கு டியூஷன் படிக்க பள்ளி முடிந்தவுடன் சென்றுள்ளார்.அப்போது மாணவிகள் யாரும் வாராததை பயன்படுத்தி தனியாக இருந்த மாணவியிடம் செல்போனிலுள்ள ஆபாச படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் மாலையில் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிந்ததை அடுத்து இந்த பிரச்சனை ஆரம்பித்தது.

இதையடுத்து ஏராளமான பொது மக்கள் ஒன்றாக இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ராஜியை கைது செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People protesting against a Tamil teacher in Thirunelveli government school, who harassed his one of a girl student.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற