அகல ரயில் பாதைப்பணிகளுக்காக 12 ஆண்டுகளாக ரயில் சேவை முடக்கம் : கோடியக்கரை மக்கள் அவதி
அகல ரயில் பாதைப்பணிக்காக 12 ஆண்டுகளாக ரயில் சேவை முடக்கப்பட்டதால் கோடியக்கரை மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகப்பட்டிணம் : பல ஆண்டுகளாக ரயில் பாதை பணிக்காக முடக்கப்பட்ட ரயிலை இயக்க அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதால் கோடியக்கரை மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடியக்கரையிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரயில்பாதை இருந்து வந்தது. இங்கிருந்து மீன், கருவாடு, காய்கறிகள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

அகஸ்தியன்பள்ளியிலிருந்து உப்பு ஏற்றுமதி மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை ரயில்வே துறைக்கு லாபம் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்பு 2006ல் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. சிறிது மாதங்களுக்குப் பிறகு, அதுவும் நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைதிட்டத்திற்கு பணிகள் துவங்கப்பட்டன. இப்பணிகளில் திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியன்பள்ளிவரை 42 பாலப்பணிகள் மட்டும் அரை குறையாக நடைபெற்றுள்ளது. வேறு எந்த பணியும் நடைபெறவில்லை.
இந்த பட்ஜெட்டிலாவது கூடுதல் நிதிஒதுக்கி பணிகள் விரைந்து முடிக்க அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் பொதுமக்களும் உப்பு உற்பத்தியாளர்களும் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த 12 ஆண்டுகளாக ரயில் சேவை இல்லாததால் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரி மூலமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உப்பிற்கு விலை இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. உப்புத்தொழிலும் நசிந்து வருகிறது.
இத்தொழிலை நம்பி உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே உப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன் கருதி மத்திய அரசு தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications