ராஜநாயகத்தின் கருத்து கணிப்பு அப்படியே பலிக்கிறதே! அடடா....
மக்கள் ஆய்வு மைய அமைப்பின் தலைவர் ராஜநாயகம் தனது கருத்து கணிப்பில் தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தது தற்போது பலித்து விட்டது.
Recommended Video

சென்னை: மக்கள் ஆய்வு மைய அமைப்பின் தலைவர் ராஜநாயகம் தனது கருத்து கணிப்பில் தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தது தற்போது பலித்துவிட்டது.
ஆர்.கே. நகருக்கு 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவியது.
மேலும் இரட்டை இலை சின்னத்தை போராடி பெற்ற அதிமுகவுக்கு இந்த தேர்தல் என்பது கடும் சவாலாகவே இருந்தது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரன் வெற்றி
இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்தே டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அமோகமாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்தான் வெற்றி பெறுவார் என்று மக்கள் ஆய்வு மைய அமைப்பு கருத்து கணிப்பில் கூறியிருந்தது.

கருத்து கணிப்பு பலித்து விட்டது
முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் அவரது அணியினர் எடுத்த கருத்துக் கணிப்பு தற்போது மெய்யாகிவிட்டது. சின்னம், வேட்பாளர், தனித்திறமை உள்ளிட்ட பிரிவுகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை 91.6 சதவீதம் பேர் அடையாளம் கண்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சின்னம் அடையாளம்
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் இரட்டை இலை சின்னம் 81.1 சதவீதம் பேரால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழ தொகுதி முழுவதும் அது குறித்த தகவல் நன்றாக சென்று சேர்ந்துவிட்டது.

கருத்து கணிப்புகள் பலித்தன
ஆர்.கே.நகரில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என ராஜநாயகம் அணியினர் கேட்ட கேள்விக்கு, டி.டி.வி.தினகரனுக்கு 35.5 சதவீதமும், மருது கணேஷுக்கு 28.5 சதவீதமும், மதுசூதனனுக்கு 21.3 சதவீதமும், பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கருத்து கணிப்பில் வெளியானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications