பெரியபாளையம் அருகே ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு.. லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
மணல் அள்ளும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்: ஏரியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள், மணல் அள்ள வந்த லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிகைபோர் ஏரி. இந்த ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கிராம மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது. இதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனாலும் கிராம மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அந்த ஏரியில் மணல் அள்ள 50-க்கும் மேற்பட்ட லாரிகள் ஒன்றன்பின்ஒன்றாக வந்தன. இப்படி மொத்தமாக லாரிகள் வருவதை கண்ட கிராம மக்கள் ஒன்றாக திரண்டனர். ஏரியில் ஒன்றுசேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏரியை நோக்கி வந்துகொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்தனர். மேலும் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களையும் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மணல்குவாரியை எதிர்த்தும், மணல் அள்ளக்கூடாது என்பது குறித்தும் மனு எழுதி கலெக்டரிடம் தருமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications