இந்து மதம் தாய்க்கழகம்.. பிரிந்து போனவர்கள் மீண்டும் வரலாம்... மதுரை ஆதீனம் பேச்சு!
சிவகாசி: இந்து மதம் தாய்க்கழகம் போல. இங்கிருந்து போனவர்கள் மீண்டும் திரும்பி வரலாம் என்று மதுரை ஆதீனம் கூறினார்.
சிவகாசி வந்த ஆதீனம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுவாக நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்து சமயத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறியவர்கள்தான். மீண்டும் அவர்கள், தாய்க் கழகத்தில் இணைவதுபோல இந்து மதத்தில் சேரலாம்.

ஜெயலலிதா முன்பு மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார். அதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனவே மத்திய அரசின் மதமாற்ற தடை சட்டம் பெரும் பிரச்சனையாகாது.
உண்மை தூங்காது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராவார். 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி துணிவோடும், தெளிவோடும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருஞானசம்பந்தருக்கு மங்கையர்க்கரசி உறுதுணையாக இருந்தார்.அதுபோல ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறப்பாக ஆட்சி செய்தார். தற்போதும் தமிழக மக்களை வழிநடத்தி செல்கிறார்.
சிறப்பான ஆட்சியாகவும், மக்களுக்குத் தேவையான ஆட்சியாகவும் இருப்பதாலும், ஜெயலலிதா உறுதியாக முடிவு எடுப்பதாலும், நான் அதிமுக ஆட்சிக்கும், ஜெயலலிதாவிற்கும் உறுதுணையாக உள்ளேன் என்றார் ஆதீனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications