திமுக, அதிமுக இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்: அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை: திமுக, அதிமுக இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதன்படி 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டில் கே.எம்.ஏ. திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டப உரிமையாளரும், பாமக நிர்வாகியுமான ஆ.வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
மண்டபத்தைத் திறந்து வைத்தப் பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-
தமிழகத்தின் அரசியல் சூழலில் அனைத்து தரப்பு மக்களும் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக, அதிமுக இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 2016 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் வரும். தமிழகத்தில் பாமக ஆட்சி அமைத்தால் முதல் சட்டமாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்றார்.
இவ்விழாவில் ரயில்வே முன்னாள் இணை அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு, செஞ்சி எம்எல்ஏ கணேஷ், மாநில பிரசார அணி நிர்வாகி கோ.எதிரொலி மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் எம்.ஆறுமுகம், லட்சுமி, ஆ.சரவணராஜ், ஆ.மணிகண்டன், ஆ.கந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications