வேலையைத் திருப்பிக் கொடு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய மக்கள் நலப் பணியாளர்கள்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தங்களுக்கு மீண்டும் வேலை அளிக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில்இன்று ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஈர துணியை வயிற்றில் கட்டிக்கொண்டும் கைகளில் மண் சட்டி ஏந்திக்கொண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். சிலர் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணக் கோலத்திலும் காட்சியளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று வடசேரி பஸ் நிலையத்திற்குள் நுழைந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து மறியலிலும் ஈடு பட்டனர். இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications