சசிகலாவை விமர்சிப்பவர்கள் என் முகநூலில் இருந்து விலகுங்கள்: ஜெயானந்த் திவாகரன் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சசிகலாவை விமர்சிப்பவர்கள் தன் முகநூல் கணக்கில் இருக்கவேண்டாம் என்றும், உடனே விலகுங்கள் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சசிகலா குடும்ப உறுப்பினர்களிடையேயான மோதல் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. சசிகலாவின் சகோதரர் திவாகரனும், அவரது மகன் ஜெயானந்தும் சசிகலாவின் அண்ணன் மகனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

People who are criticizing Sasikala please unfollow me

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திவாகரன் கடுமையாக சசிகலாவை திட்டியதாக வெளியான செய்திக்கு முகநூலில், அக்காவைத் திட்டாத தம்பி இந்த உலகத்தில் கிடையாது. இது எல்லாம் ஒரு விஷயமா? என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று ஜெயனாந்த் திவாகரன் வெளியிட்டுள்ள தனது முகநூல் பதிவில், சின்னம்மாவை விமர்சிப்பவர்கள் உடனடியாக என் முகநூலில் இருந்து விலகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்கான பின்னூட்டங்களில், இதை கட்சித் தொண்டர்கள் எங்களுக்குச் சொல்லாதீர்கள்; முதலில் உங்கள் அப்பா திவாகரனுக்கு இதைச் சொல்லுங்கள் என்று பலர் பதிவிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People who are criticizing Sasikala please unfollow me says Jeyanandh Divakaran. Divakaran Son Jeyanandh Divakaran yesterday posted in Facebook .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற