பாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்
பாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் என்று தமிழிசை குறிப்பிட்டு உள்ளார் .
சென்னை : பாஜகவை மனதில் வைத்து தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்து இருக்கமாட்டார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னை வேப்பேரியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அவர்களால் இங்கு எந்த காலத்திலும் காலூன்ற முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை.
ஆனால் நிச்சயமாக பாஜகவை மனதில் வைத்து அவர் அப்படி விமர்சித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை மனதில் வைத்து கூட அவ்வாறு பேசி இருக்கலாம். தெளிவாக சொன்னால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பலரும் பாஜக இங்கு காலூன்ற முடியாது என்கிற கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். காலூன்றவே முடியாத ஒரு கட்சியை பற்றி அவர்கள் ஏன் பேச வேண்டும்? தொடர்ந்து வெளியில் இப்படி பேசி வந்தாலும் உள்ளுக்குள் பாஜக குறித்த பயம் இருப்பதே அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
தற்சமயம் பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், யாருடனும் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் பாஜக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications