ரம்ஜான் விடுமுறை குற்றாலத்தில் குவிந்த பயணிகள்
செங்கோட்டை: ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 தினங்களாக சாரல் மழை இல்லாததால் இங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும்,சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

ஆர்பரிக்கும் தண்ணீர்:
குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அருவிகளில் அலைமோதி வருகிறது.

ரம்ஜான் விடுமுறை கொண்டாட்டம்:
மேலும் இன்றும்,நாளையும் ரம்ஜான் விடுமுறை தினம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகிழ்ச்சியில் வியாபாரிகள்:
இதன் காரணமாக அருவிக்கரையில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாலைகளில் வாகன நெரிசலும் அடிக்கடி ஏற்படுகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசார்:
குற்றால மெயின் அருவியில் பெண்கள் பகுதியில் 10க்கும் மேற்ப்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

உற்சாக குளியலில் பெண்கள்:
பெண்கள் ஆனந்தமாக குளிக்க 100 பெண்கள் சுமார் 15 நிமிடம் குளிக்கும் வண்ணம் பிரித்து, பிரித்து அனுப்புவதால் அவர்கள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.

குளிக்க நல்ல பாதுகாப்பு:
இதுகுறித்து பெண்கள் கூறும் போது பெண்களுக்கு குளிக்க நல்ல முறையில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சோப்பு போட்டு குளிக்கத் தடை:
குற்றாலஅருவிக்கரையில் சோப்பு போட்டு குளிக்க தடைவிதிக்கப்பட்டும் மீறி குளிக்கும் பயணிகளிடம் அபதாரம் வசூலிப்பது தொடர்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications