360 பவுன் தங்கம்.. வாடகைக்கு குடிபோன வீட்டின் ஓனரிடமே.. கோடிகளில் புரண்ட பெண்ணுக்கு ட்விஸ்ட்
பெரம்பலூர்: இருக்க இடம் கொடுத்தால், வீட்டையே கேட்பார்கள் என்ற பழமொழி உண்டு. அப்படியே பெரம்பலூரில் நடந்துள்ளது. ஒரு பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் பர்வீன் பானு என்ற பெண்ணுக்கு கடன் கொடுத்துள்ளார். அவரும் நாணயமாக திரும்ப கொடுத்துள்ளார். அடிக்கடி கடன் பெற்று திரும்ப கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் நகைகளை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டுள்ளார். அந்த வகையில் பெண்ணிடம் 360 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்தாராம் பர்வீன் பானு... இந்த விவகாரத்தில் பர்வீன் பானு மற்றும் அவரது கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இன்றைக்கு நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். சிறிய அளவில் வாங்கி கடனை திரும்ப தருகிறார்கள் என்பதற்காக எந்த அடிப்படையும் இன்று பல லட்சம் பணத்தை கடன் கொடுப்பது தவறு.. அதேபோல் எவ்வளவு தான் பழக்கம் என்றாலும், நகைகளை அடகு வைத்து பணம் கடன் வாங்க அவர்களை அனுமதிப்பதும் பின்னாளில் நம்பவே முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். அப்படித்தான் ஒரு தம்பதி, உதவி செய்தததால் இன்று 360 பவுன் தங்களை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். உதவி செய்தவர்களிடமே கைவரிசை காட்டிய தம்பதி தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பெரம்பலூர் பெண் புகார்
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு ஜமாலியா நகரில் பஷீர் அஹமத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி உம்மல் பஜரியாவுக்கு 53 வயது ஆகிறது. இவர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் உள்ள தகவ்லகளை அப்படியே பார்ப்போம்.
வாடகைக்கு வந்தனர்
எனது கணவர் பஷீர் அஹமத் துபாயில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு கல்யாணமாகிவிட்டது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு எனது மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டோம்.. அந்த வீட்டை பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த பஜீலுல் ரஹ்மானின் (52) மனைவி பர்வீன் பானு (46) குடும்பத்தினருடன் வாடகைக்கு விட்டோம்.
செல்போன் கடைக்கு கடன்
வாடகைக்கு குடிவந்த நாள் முதலே, என்னுடன் நன்கு பழகிய பர்வீன் பானு கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவ்வப்போது கடனுக்கு பணம் பெற்று நேர்மையாக திருப்பி தந்தார். இதையடுத்து தொழில் தொடங்குவதாக என்னிடம் பர்வீன் பானு ரூ.8 லட்சத்து 80 ஆயிரத்தை ரொக்கமாகவும், ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை காசோலையாகவும் பெற்று கணவருடன் சேர்ந்து செல்போன் கடையை தொடங்கினார்.
ஏராளமான தங்க நகைகள்
பின்னர் கடைக்கு புதிய செல்போன்கள் வாங்குவதற்கும், குடும்ப சூழ்நிலையை கூறியும் மீண்டும் 80 பவுன் நகைகளை என்னிடம் பெற்றார். மேலும் அவர்கள் துபாயில் உள்ள எனது தங்கை பரிதா பானுவின் வங்கி லாக்கரில் இருந்த 196 பவுன் நகைகளையும், வி.களத்தூரில் உள்ள எனது அக்காள் நூருன்னிஷாவின் 84 பவுன் நகைகள் என மொத்தம் 360 பவுன் நகைகளை பெற்றார்கள்.
மகளுக்கு 50 பவுடன் திருமணம்
இதையடுத்து அவர்கள் வங்கிகள், நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். மேலும் அவர்களுடைய மகள் அப்ரீன்பானுவை 50 பவுன் தங்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்தார்கள். இந்தநிலையில், நகைகளை திருப்பி தராமல் மோசடி செய்ததுடன் நாங்கள் அவர்களை கடனை கேட்டு மிரட்டுவதாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
தம்பதி கைது
எனவே என்னிடம் நகைகளை பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்த பர்வீன் பானு, அவரது கணவர் பஜீலுல் ரஹ்மான், மகள்கள் அப்ரீன்பானு, நஷ்ரீன் பானு மற்றும் இதில் தொடர்புடைய ஹையத் பஹ்சா, சாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தர வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடா்பாக பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்வீன் பானு, பஜீலுல் ரஹ்மான் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் பர்வீன் பானுவை திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் சிறையிலும், பஜீலுல் ரஹ்மானை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.
-
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தங்கம் விலை இனியும் சரியும்.. விடாமல் விலை குறையும்.. ஆனால் அதற்கு பின்புதான் ட்விஸ்ட் இருக்கு! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications