சக கைதியால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வழக்கு… பேரறிவாளன் கோர்ட்டில் ஆஜர்

சக கைதியால் இரும்பு கம்பி கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சிறையில் சக கைதி ராஜேஷ் கண்ணா என்பவரால் இரும்பு கம்பி கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் சாட்சியம் சொல்ல பேரறிவாளன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ளார் பேரறிவாளன். கடந்த ஆண்டு அவரை, சக கைதியாக இருந்த ராஜேஷ் கண்ணா என்பவர் திடீரென இரும்பு கம்பியால் தாக்கினார்.

Perarivalan appears in court

இதில் படுகாயம் அடைந்த பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டன. பின்னர், குணம் அடைந்த நிலையில் அவர் சிறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.

இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக பேரறிவாளன் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிவாளனை தாக்கிய ராஜேஷ் கண்ணா, ஆள் கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். மதுரையைச் சேர்ந்த இவர் ஏன் பேரறிவாளனை தாக்கினார் என்ற விவரம் இது வரை வெளி வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+