வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது சக கைதி சரமாரி தாக்குதல்- தலையில் 6 தையலுடன் தீவிர சிகிச்சை!!
வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளவன் மீது சக கைதி ராஜேஷ் சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளவன். அவரது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று வேலூர் சிறையில் பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் பேரறிவாளவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் சிறை மருத்துவமனையில் பேரறிவாளவன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டன. தொடர்ந்தும் பேரறிவாளவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications