விடியல் பதிப்பகத்தின் ”பெரியார் இன்றும் என்றும்” ஒலிநூல் வெளியீட்டு விழா!
விடியல் பதிப்பகத்தின் வெளியீடான “பெரியார் இன்றும் என்றும்” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
சென்னை: விடியல் பதிப்பகத்தின் வெளியீடான "பெரியார் இன்றும் என்றும்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
விடியல் பதிப்பகத்தின் வெளியீடான "பெரியார் இன்றும் என்றும்" எனும் நூல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைந்து பயனுறக்கூடிய வகையில், ஒலிவடிவ நூலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அச்சுநூலாக இருக்கும் புத்தகத்தைப் படிக்க இயலாதோர் பயனுறும் வகையில், ஒலிவடிவ நூலாக்கும் முயற்சியில் கடந்த ஆறுமாத காலமாக ஈடுபட்டு வந்த தன்னார்வலர் குழுவொன்று, மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு, தகுந்த ஏற்றஇறக்கம், வியப்பு, வினவு, நிறுத்தற்குறிகளுக்கான ஒலிக்குறிப்புகளுடன் கூடிய, ஆடியோபுக், ஒலிவடிவிலான நூலினைத் தமிழ்மொழியில் படைத்திருக்கின்றனர். எவ்வித மொழிமாற்றச் சிதைவுக்கும் ஆட்பட்டு விடாமல் எளிதாய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுமுகமாகவும், தமிழ் ஒலியில் இருக்கும் இந்நூலினை உருவாக்கியுள்ளனர்.
சமூகச்சீர்திருத்தப் போராளியான தலைவர் பெரியாரின் உரைகளையும் படைப்புகளையும், மாற்றுத்திறனாளிகள் நுகர்வுக்கு இட்டுச்செல்லக் கூடிய வகையில் ஒலிவடிவத்தில் கொணர முனைந்த இக்குழு, இவ்வொலி நூலினை மாவட்ட, கல்லூரி நூலகத்தைச் சார்ந்த மாற்றுத்திறன்வாசகர்கள் பயனடையக்கூடிய வகையிலும் வெளியிட முடிவு செய்தது.
தலைவர் பெரியாரின் படைப்புகளை ஒலிநூலாக்கும் பணியில் இது முதற்கட்டமென்பதாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒலிநூல்வழி வாசிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டும், எதிர்வரும் ஜூலை 14ஆம் நாள், சனிக்கிழமையன்று, 'பெரியார் இன்றும் என்றும்' ஒலிநூல் வெளியீட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 - பகல் 12.30 மணி வரை எத்திராஜ் கல்லூரி நூலக வளாகம், 70, எத்திராஜ் சாலை, எழும்பூர்,சென்னை 600008, இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திராவிடர்கழகச் செயலாளர் திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்பாளராகப் பங்கேற்று நூலினை வெளியிட்டுப் பேசவுள்ளார். அந்நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்து பங்கேற்குமாறு, மாற்றுத்திறனாளிகள் முற்போக்கு அமைப்பினர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications