தந்தை பெரியார் குறித்து அவதூறு: ஜன.22, 23-ல் ரஜினிகாந்த் வீடு முற்றுகை- திவிக, தபெதிக
Recommended Video
சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து அவரது சென்னை போயஸ் கார்டன் வீட்டை வரும் 22--ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் விடுதலை கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பேசி, பெரியார் மீது அவதூரை பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையரிடத்தில் 18.01.2020 அன்று காலை 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்று உமாபதி அறிவித்தார்.
அதன்படி இதுவரை காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடிகர் ரஜினிகாந்தும் இதுவரை தனது அவதூறு கருத்திற்கு வருத்தமும் தெரிவிக்காத காரணத்தினால், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.23-ல் ரஜினி வீடு முற்றுகை- கோவை ராமகிருட்டிணன்
இதேபோல் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் ராமன் சீதை உருவங்களை நிர்வாணமாக கொண்டுவந்து செருப்பால் அடித்தார் என்று பொய்யான செய்தியை நடிகர் ரஜினிகாந்த் பரப்பி இருக்கின்றார். இது அப்பட்டமான பொய் செய்தி.
இதற்காக ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 23-ந்தேதி காலை 10 மணிக்கு போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications