தஞ்சை அருகே பெரியார் சிலைக்கு செருப்பு மாலை.. தமிழகத்தில் தொடரும் அவலம்.. திக போராட்டம்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு அவமதிப்பு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரு தினங்கள் முன்பாக பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக பிரமுகர் முத்துராமன் சிக்கினார்.

இதேபோல, சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பை வீசிய பாஜக வக்கீல் ஜெகதீஷனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபோன்ற அவமதிப்பு சம்பவங்களுக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் உள்ள பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இன்று காலை பொதுமக்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும், திராவிடர் கழக தொண்டர்கள் போராட்டம் நடத்த அங்கு குவியத் தொடங்கினர். இதையடுத்து போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சிலையை அவமதித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications