அதிமுக தேர்தல் அறிக்கை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது - பீட்டர் அல்போன்ஸ்
தென்காசி: அதிமுக தேர்தல் அறிக்கை யதார்த்ததிற்கும், நடைமுறைக்கும் சாத்தியமில்லாத ஒன்று என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பழனி நாடரை ஆதரித்து பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அதிமுக அரசு யாதார்த்ததிற்கும், நடைமுறைக்கும் சாத்தியமில்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை என்பது விவாதத்திற்குட்பட்டது. பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை காப்பியடித்து பல கட்சிகளின் அம்சங்களை சேர்த்து ஒரு ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டுள்ளனர். நிதி ஒழுக்கத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு அறிக்கைதான் அது.
பெண்களுக்கு 60 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை 30 ஆயிரம் ரூபாய் மானியத்தில் கொடுப்பார்களாம். ஒரே வீட்டில் 6 பெண்கள் இருந்தால் அதுவும் பணி புரிபவர்களாக இருந்தால் எப்படி கொடுப்பார்கள். மேலும் பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதில் எந்த மாதிரியான பணி புரிபவர்களுக்கு கொடுப்பார்கள். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரிபவர்களுக்கா..இதில் யாருக்கு என்று விளக்கமில்லை.
தேர்தல் ஆணையம் கையாலாகாத நிலையில் உள்ளது. காரணம் தேர்தல் முறைக்கேட்டை கண்காணிக்க ஒரு டிஜிபியை நியமித்துள்ளனர். அவருக்கு செல்போன் கிடையாது. உதவியாளர்கள் இல்லை, அலுவலகம் இல்லை. மாநில அரசு தேர்தல் ஆணையத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறது. தேர்தல் ஆணையரும், பார்வையாளர்களும் தேர்தல் முடிந்த பின்னர் மாநில அரசில்தான் பணிபுரிய வேண்டுமென்பதால் தைரியமாக பணிபுரிய தயக்கம் காட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையமும், தேர்தல் ஆணையாளரும் முறையாக செயல்படவில்லை. எனவே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளோடு வருமான வரித்துறை அலுவலர்களையும் இணைக்க வேண்டும் என்றார். தற்போது வெளியாகும் இந்த கருத்துக் கணிப்புக்கள் அனைத்தையும் நாங்கள் நம்ப தயாரில்லை என்றார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications