சிவசேனா -விஎச்பி நிர்வாகிகளிடையே மோதல்: குண்டு வீசித் தாக்குதல் - கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில், இந்து அமைப்புகளுக்கிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் சிவசேனா அமைப்பின் நிர்வாகி வீட்டில் எதிர்த் தரப்பினர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீர்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சிவசேனா அமைப்பின் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்றிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.
குண்டு, வீட்டின் முன் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. சப்தம் கேட்டு வெளியே வந்த முத்துகுமாரின் உறவினர்கள் வீட்டின் முன்பு தீ பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயை அணைத்தனர்.
ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்குத் தகவல் போனது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கைரேகைளைப் பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டின் பாகங்களையும் மீட்டனர்.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக முத்துக்குமாருக்கும், விஎச்பியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே சுபாஷ்தான் தனது வீட்டில் குண்டு வீசப்பட்டதற்குக் காரணம் என முத்துக்குமார் போலீஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுபாஷ் தலைமறைவாகி விட்டார். அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications