தூத்துக்குடி அருகே விஜய் நற்பணி இயக்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விஜய் நற்பணி இயக்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பைக்குகள் எரிந்து நாசமாகின. இதனால் பொதுமக்கள் பதட்டத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி மட்டக்கடை, சின்னகடை தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர். மேலும் இவர் மாவட்ட விஜய் நற்பணி இயக்க தலைவராகவும் இருந்து வருகிறார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான இவர் தனது சகோதரர்களுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வதுடன், லாரி செட்டும் வைத்துள்ளார்.

Petrol bombs hurled at Vijay Narpani Iyakkam leader's house

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவரது வீ்ட்டருகே ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்கவே வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர். தரை மற்றும் சுவரில் மோதி பெட்ரோல் குண்டுகள் வெடித்ததில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பில்லா ஜெகனின் பைக், மற்றும் மாடியில் குடியிருக்கும் நிதி நிறுவன ஊழியர் ஜாபர் ஷா என்பவரது பைக்குகள் தீயில் எரிந்து நாசமாயின. உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் பைக்குகள் எரிந்து நாசமாகிவிட்டன.

இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினார். தொழில் போட்டியால் இந்த சமபவம் நடந்ததா, அல்லது முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+