நாடு முழுவதும் அக்.13-இல் பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் அக்டோபர் 13-ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை: பெட்ரோலிய பொருள்களுக்கு தினமும் விலை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொண்டு வந்தன. இந்நிலையில் புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் மே 1 முதல் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலிண்டர் எரிவாயு போல் பெட்ரோலிய பொருள்களுக்கு ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் திட்டத்தை விரைவில் தொடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பெட்ரோலிய பொருள்களை வீடு தேடி கொண்டு வரும் திட்டத்தை கைவிடக் கோரியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications