இன்றைக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65.72, டீசல் லிட்டர் ரூ.56.65

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.65.72 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.56.65 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் உள்ளது. இதற்காக பெட்ரோல், டீசலின் தினசரி விலையை அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. fuel@ioc என்ற செயலியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

petrol, diesel price hiked today

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.65.72, டீசல் விலை 22 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.56.65 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
petrol and diesel rate increase on today
Please Wait while comments are loading...