பெட்ரோல் விலை 36 காசுகள், டீசல் 87 காசுகள் உயர்வு- நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 காசுகளும், டீசல் விலை 87 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பெட்ரோல் விலை 36 காசுகளும், டீசல் விலை 87 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதேநேரத்தில், கடந்த மாதத்தில் இருந்து, இதுவரை, மூன்று முறை, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வை அடுத்து, சென்னையில், 1 லிட்டர் பெட்ரோல், 36 காசுகள் அதிகரித்து, 61.38 ரூபாய்க்கும்; டீசல் விலை, 90 காசுகள் அதிகரித்து, 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் விலை எவ்வளவு?
சென்னையில் 61 ரூபாய் 2 பைசாவாக ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 61 ரூபாய் 38 பைசாவாக ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பெட்ரோல் விலை 36 காசு உயர்ந்துள்ளது.
அதேபோல 47 ரூபாய்10 ஆக இருந்த டீசல் விலை, 48 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் விலை நிலவரம்
டெல்லியில், பெட்ரோல் விலை 60 ருபாய்70 பைசாவில் இருந்து 36 காசு உயர்ந்து 61 ரூபாய் 06 பைசாவாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை 45 ரூபாய்93 பைசாவில் இருந்து 87 காசு உயர்ந்து ரூ.46.80 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை பெட்ரோல் - டீசல்
மும்பையில், பெட்ரோல் விலை ரூ.67.77ல் இருந்து 36 காசு அதிகரித்து ரூ.68.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலை ரூ.53.11 பைசாவில் இருந்து 93 காசு அதிகரித்து ரூ.54.04 பைசாவாக விற்கப்படுகிறது.

கொல்கத்தா நிலவரம்
கொல்கத்தாவில், பெட்ரோல் விலை ரூ.66.11ல் இருந்து 28 காசு உயர்ந்து ரூ.66.39 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ.49.55 பைசாவில் இருந்து 74 காசு உயர்ந்து ரூ.50.29 ஆக விற்பனையாகிறது.

விலை உயர்வு ஏன்?
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் உற்பத்தி விலை உயர்ந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும் இந்த விலை உயர்வு அவசியமாகி விட்டதாக இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது முறையாக உயர்வு
கடந்த ஜூலை 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசு உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 5 மாதங்களில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
டீசல் விலையை பொறுத்தவரை, அடுத்தடுத்த 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications