சென்னையில் வெள்ளம் ஏற்படவும், அழிவிற்கும் தமிழக அரசே காரணம்: பொது நல வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக அரசு தான் சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வர்த்தகரும், சமூக ஆர்வலருமான ராஜீவ் ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

PIL against TN govt. accusing it as reason for floods in Chennai

சென்னையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் கமிஷன் ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இன்றி உபரி நீர் இந்தளவிற்கு திறந்து விட்டதால்தான் இந்த அளவிற்கு வெள்ளம் ஏற்படுவதற்கும், அழிவிற்கும் காரணம். தொடர்ந்து அணைக்கு எந்தளவிற்கு நீர் வருகிறது எந்தளவிற்கு வெளியேற்றப்படுகிறது என்று ஒருவர் கவனித்து வந்து இருக்க வேண்டும். தாமதமாக செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் திறந்ததால்தான் இந்த நீர் அடையாற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

இந்த அணையில் இருந்து 39,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி நடு இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்கும்போது நீரை திறந்தது பலருக்கும் தெரியவில்லை. தூங்கிக் கொண்டு இருந்தனர். நடு இரவில் விடப்பட்ட எச்சரிக்கையால் எந்த பலனும் இல்லை.

பொதுப் பணித்துறை அதிகாரிகள் நவம்பர் 29ஆம் தேதி செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதற்கு அனுமதி கோரி உள்ளனர். ஆனால், அவர் அதற்கு 3 நாட்கள் அனுமதி வழங்கவில்லை. டிசம்பர் 1 ஆம் தேதி நடு இரவில்தான் அனுமதி வழங்கியுள்ளார்.

நிலைமையை நன்றாக தெரிந்து இருந்தும் தலைமைச் செயலாளர் செயல்படாமல் இருந்துள்ளார். இவர்களது அஜாக்கிரதை தான் 280 பேர் இறக்கவும் பலரது சொத்துக்கள் சேதமடையவும் காரணமாக இருந்துள்ளது. ஒரு கமிஷன் அமைத்து தவறு செய்த அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். இது மனிதக் கொலை என்றுதான் கூற வேண்டும்.

இந்தக் கமிஷனில் அரசு அதிகாரிகள் தொழில்நுட்பக் கலைஞர்கள், மூத்த வக்கீல்கள், அறிவியல் அறிஞர்கள், சுற்றுப்புற ஆர்வலர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுகள் முடித்து எடுக்கக் வேண்டிய நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை வெள்ளத்துக்கு 280 பேர் பலியாகி பள்ளிகள் மூடப்பட்டு, சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதே போன்று தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+