பிரஸ்ஸல்ஸில் மாயமான தமிழரை கண்டுபிடித்துக் கொடுங்கள்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் இருந்து மாயமாகியுள்ள சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 22ம் தேதி காலை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதையடுத்து மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளில் 34 பேர் பலியாகினர். மேலும் பெல்ஜியத்தில் பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசை காணவில்லை. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த மெட்ரோ வழித்தடம் வழியாகத் தான் அவர் தினமும் வேலைக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கணேசை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன், தன்னுடைய பெற்றோருக்கு மூத்த மகன். அவரது இளம் மனைவி குழந்தை பிறந்ததை அடுத்து தற்போது சென்னையில் இருக்கிறார்.
அவரது மொத்த குடும்பமும் ஆழ்ந்த துயரில் உள்ளது. தன்னுடைய மகனை கண்டுபிடிக்கக் கோரி என்னிடம் உதவி கோரியுள்ளனர். கணேசனை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை மூலமாகவும், பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், கவலையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்திற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications