தமிழர்களை காக்க கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்புக: ஜனாதிபதியிடம் அன்புமணி மனு
சென்னை: காவிரி பிரச்சனையால் அச்சத்தில் உறைந்து போயிருக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கர்நாடகத்திற்கு ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

காவிரி பிரச்சனையில் தமிழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து கர்நாடகத்தின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. அவற்றை அடக்காமல் கர்நாடக அரசு வேடிக்கை பார்த்தது.
கர்நாடகத்தில் தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் அச்சம் இன்னும் விலகவில்லை. எந்த நேரமும் தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்துள்ளனர்.
தமிழர்களின் கடைகளும், வணிக நிறுவனங்களும் இன்னும் திறக்கப்படவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் துணை ராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், பேரச்சத்தின் பிடியிலிருந்து தமிழர்கள் இன்று வரை முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலைமையை மாற்றி கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
* தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கர்நாடகத்திற்கு ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும்.
* பிரதமரும், உள்துறை மந்திரியும் உடனடியாக பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். தமிழர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். இந்த நிகழ்வில் தமிழக, கர்நாடக முதல்-அமைச்சர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.
* வன்முறையால் சேதம் அடைந்த தமிழர்களின் உடமைகளுக்கு மத்திய, கர்நாடக அரசுகள் இணைந்து இழப்பீடு வழங்க வேண்டும்.
* கன்னடர்கள் மற்றும் தமிழர்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இருபிரிவு மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய நல்லிணக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
* எதிர்காலத்தில் காவிரி பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன், நடுவர்மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
தமிழர்களையும், இந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications