தென்காசியில் அடமானம் வைத்த 56 கிராம் தங்க நகை.. ஆசையாய் வைர வியாபாரி.. 3.5 லட்சத்தில் தேய்ந்த தங்கம்
தென்காசி: தமிழகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில், போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக, செப்பு அல்லது கவரிங் நகைகள் மீது தங்க முலாம் பூசி, அவற்றை அசல் தங்கம் என்று கூறி ஏமாற்றும் கும்பல்கள் பெருகியுள்ளன. அதேபோல தங்க நகைக்கடைகளில் அடாவடி சம்பவங்களும் நடக்கின்றன.. இதோ இந்த தென்காசி விவகாரத்தை பாருங்கள்.
நாளுக்கு நாள் போலி தங்க நகைகள் மோசடி நடிக்கிறது.. வங்கியிலேயே வேலை பார்க்கும் நகை மதிப்பீட்டாளர்கள் அல்லது ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயம். சமீபத்தில் சென்னையில் ஒரு வங்கிக் கிளையில் மட்டும் ரூ.2.38 கோடி வரை இதுபோல மோசடி நடந்துள்ளது அம்பலமானது..

தங்க நகை மோச5டி
இந்த நூதனத் திருட்டைத் தடுக்க, இப்போது வங்கிகள் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. அடமானம் வைக்கப்படும் நகைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்டு சோதிப்பதும், லாக்கரில் உள்ள நகைகளை அடிக்கடி தணிக்கை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைக்கும்போது முறையான ரசீதுகளை வாங்க வேண்டும் என்றும், முன்பின் தெரியாத நபர்களை நம்பி நகைகளைக் கொடுத்து அடமானம் வைக்க வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. தவறு செய்யும் ஊழியர்கள் மற்றும் மோசடி கும்பல் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட மோசடிகள் தொடர்கதையாகி வருகின்றன..
தென்காசி நகைக்கடைக்காரர்
தென்காசி நகரப்பகுதியை சேர்ந்த ஹர்ஷத் என்பவர், அந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்மன் சன்னதி பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்..
அதே பகுதியில் மற்றொரு நகைக்கடையை நடத்தி வருபவர் காலிப் என்பவராவார்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹர்ஷத்தை அணுகிய காலிப், தனக்குத் தெரிந்த ஒருவரின் 56 கிராம் தங்க நகை சுமார் 3.5 லட்ச ரூபாய்க்கு அடமானத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.. அந்த நகையை அடகிலிருந்து மீட்கப் பணம் கொடுத்தால், அந்த நபர் நகையை ஹர்ஷத்திடமே விற்பனை செய்துவிடுவார் என ஆசை வார்த்தைகளை அவர் கூறியுள்ளார்..
இதனை நம்பிய ஹர்ஷத், காலிப்பிடம் 3.5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து நகையைத் திருப்பியுள்ளார்.. ஆனால், அந்த நகையை ஆய்வு செய்தபோது அது தரம் குறைந்த தங்கம் என்பது தெரியவந்தது..
வியாபாரி தங்கம் ஆசை
இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷத், தரம் குறைந்த இந்த நகை தனக்குத் தேவையில்லை என்றும், தான் கொடுத்த பணத்தை உடனடியாகத் திருப்பித் தருமாறும் கேட்டுள்ளார்.. ஆனால் காலி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.. இது தொடர்பாகத் தீர்வு கிடைக்காததால், ஹர்ஷத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்..
இந்த வழக்கு நிலுவையில் இருந்த சூழலில், நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நைஸாக பேசி, ஹர்ஷத்தை காலிப் தரப்பினர் அழைத்துள்ளனர்..
தேய்ந்த தங்கம்?
அப்போது காலிப் மற்றும் அவருடன் இருந்த சில நபர்கள் சேர்ந்து ஹர்ஷத்தை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி, இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.. ஹர்ஷத்தை தாக்கிய புகாரில் நகைக்கடை உரிமையாளர் காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் பிடித்துள்ளனர்.. தற்போது அவர்கள் 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications