"புள்ளகுட்டிகள படிக்க வைங்கப்பா"- கமல் டயலாக்கை பேசிய ரஜினி - சோஷியல் மீடியாக்கள் மீதும் பாய்ச்சல்
குடும்பத்திலும், குழந்தைகள் படிப்பிலும் கவனம் செலுத்துங்கள் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
Recommended Video

சென்னை: ரசிகர்கள் கட்டுப்பாடு ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வெளியாகும் கொடூரமான, தவறான விஷயங்களில் கவனம் செலுத்த கூடாது என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக்கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி கூறுவேன் என்று கூறிய ரஜினி, மக்களை விட ஊடகங்கள் தான் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருப்பதாக கூறினார்.

சமூக வலைதளங்கள் பெருகிவிட்டது, அதில் தினந்தோறும் பல்வேறு விதமான வருந்தத்தக்க சம்பவங்கள் வெளியாகிறது. தந்தை கொலை, தாய் கொலை, குழந்தை கொலை என்று இந்த மாதிரியான விஷயங்களில் ரசிகர்கள் கவனம் செலுத்தாதீர்கள். உங்களின் மனம், எண்ணம் ஆகியவை கெட்டுப்போய் விடும்.
கட்டுப்பாடும், ஒழுக்கமும் தான் வாழ்க்கையில் மிக முக்கியம். அதனை எப்போது தவற விடாதீர்கள், குடும்பத்தை கவனியுங்கள், குழந்தைகளின் படிப்பில் அக்கறை செலுத்துங்கள் அதுதான் வாழ்க்கையில் முக்கியம். மத்ததெல்லாம் அதுக்கு அப்புறம் தான், என ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை வழங்கினார்.
அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை இன்று ரஜினி வெளியிடாத வருத்தத்தை விட, ரஜினியிடம் இன்று புகைப்படம் எடுக்க முடியாமல் போய் விடுமோ என்ற வருத்தமும் பதற்றமும் தான் அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications