ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது- 91.1% மாணவர்கள் தேர்ச்சி
தமிழகம் மற்றும் புதுச்சேரி ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications