பிளஸ் 2 மாணவர்களுக்கு படிக்கும் கல்வியாண்டிலேயே லேப்டாப் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 படிக்கும் போதே மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தாலும் அவர்கள் பிளஸ்-2 படித்து முடித்த பிறகுதான் கொடுக்கப்பட்டு வந்தது.
இனி அப்படி கொடுக்காமல் அவர்கள் பிளஸ் 2 படிக்கும் போதே மடிக்கணினி கொடுக்கும் முறை இந்த வருடம் அமலுக்கு வந்துள்ளது.

விலையில்லா பொருட்கள்:
மாணவ, மாணவிகள் நலன் கருதி விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பைகள், மடிக்கணினி உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
பயனடையும் மாணவர்கள்:
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி விலை இல்லாமல் கொடுக்கும் முறை உள்ளது. உயர் கல்வி படிக்கும்போது அந்த மடிக்கணினி பயன்படுகிறது. இதனால் ஏராளமான ஏழை மாணவர்கள் பயன் அடைகிறார்கள்.
முடித்த பிறகுதான் வழங்கப்படும்:
இந்த மடிக்கணினி பிளஸ் 2 முடித்த பிறகு, அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த பிறகுதான் அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தது.
படிக்கும்போதே மடிக்கணினி:
இந்நிலையில் அந்த மடிக்கணினி முன்கூட்டியே கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் முதல், மடிக்கணினியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் பணியை நேற்று தொடங்கியது.

இந்த ஆண்டே வழங்கப்படும்:
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், "2015-2016 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உரிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 72 மடிக்கணினிகள் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வருடம் மடிக்கணினிகள் அனைத்தும் வந்துவிட்டன. எனவே உடனே கொடுக்கும் பணியை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்ய உள்ளனர்" என்று தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications