முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.3% பேர் தேர்ச்சி!
முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
Recommended Video

சென்னை: முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத் தேர்வுகள் நடப்பது போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7070 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்த 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியரும், தனித் தேர்வர்களாக 1753 மாணவ, மாணவியரும் எழுதினர்.

இணையதளத்தில் வெளியீடு
இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போனில் எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

91.3% பேர் தேர்ச்சி
தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியாகியுள்ளன.
இதில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவிகளே அதிகம் தேர்ச்சி
இதில் மாணவர்கள் 84.7% பேர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 94.6 சதவீதம் பேர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% பேர் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு முதலிடம்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் 97.3% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. 94.6% திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications