பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 16-ல் வெளியீடு- புள்ளி விவரங்களையும் இணையத்தில் பார்க்கலாம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி வெளியிடப்படும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி வெளியிடப்படுகின்றன. இம்முறை பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கை:

நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

Plus two results on 16th May Morning 9.30am

இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறையினை தேர்வுத்துறை அறிமுகப்படுத்துகிறது.

இணையதள முகவரி: http://www.dge.tn.nic.in, http://www.dge.tn.gov.in

பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம் :16.05.2018 மற்றும் 9.30 மணிமுதல்

ஊடகவியலாளர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று தேர்வு முடிவுகள் சார்ந்த புள்ளிவிவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+